AboutAbout the Department - Tamil

தமிழ்த்துறை

            என்றுமுள தென்றமிழ் ஈடிலா பெருமையை உடையதுசெம்மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. அத்தகு சிறப்பினைப் பெற்ற தமிழைக் கற்பிக்கும் தமிழ்த்துறையானது 1973  ஆம் ஆண்டில் ஒரே ஒரு துறையுடன் தொடங்கப் பெற்ற இக்கல்லூரி மாணவர்களுக்குத் தமிழின் சிறப்பையும் , ஆளுமையையும் எடுத்துரைக்கும் வகையில் பொதுமொழிப்பாட அளவில் மட்டும் இருந்து வந்தது. துறைதோறும் தமிழ் வளர்ச்சியை முன்னிட்ட சீர்மிகு திட்டத்தின் வாயிலாக 2018-2019 ஆம் கல்வியாண்டு முதல்  இளநிலை தமிழிலக்கிய பட்டத்தையளிக்கும் துறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. கல்லூரி தொடங்கப் பெற்ற காலம் முதலாகவே அனைத்து மாணவர்களின் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் பாட்டுப் போட்டிகள் நடத்தப்பெற்று வந்த நிலையில் மாணவர்தம், படைப்பாற்றலை வெளிக்கொணரும்  பொருட்டு கவிதை,கட்டுரை,ஓவியம் முதலான பல்வகைப் படைப்புகள் மாணவர்களிடமிருந்து பெறப்பட்டு, ”குயில்” என்ற பெயரில் கையெழுத்திலான சிற்றிதழாக ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது.

       தனித்துறையாக வளர்ச்சி பெற்ற நிலைக்கேற்ப தமிழின் பல்வேறு துறைகளில் தங்கள் ஆளுமையைச் செலுத்திவரும் அறிஞர் பெருமக்களைக் கொண்டு மாணவர்கள் பயனடையும் வகையிலான கருத்தரங்குகள் நடத்தப் பெற்று வருகின்றன. சுவடியியல், பதிப்பியல், இலக்கணம், நடையியல் எனப் பல துறைகளில் 70க்கும் மேற்பட்ட நூல்களோடு  260 –க்கும் மேலான கட்டுரைகளையும் எழுதியுள்ள தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர்.இ.சுந்தரமூர்த்தி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவர் பேராசிரியர் பு. பிரகாசம், உலகப் புகழ்பெற்ற வேர்ச்சொல் அறிஞர் பேராசிரியர் கு.அரசேந்திரன் போன்ற பெரும் பேராசிரியர்களோடு தமிழில் தடம் பதித்துவரும் பல்கலைக் கழக மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் இக்கருத்தரங்குகள் மற்றும் வலையரங்கங்களில் பங்கேற்றுச் சிறப்பித்து வருகின்றனர். இவைமட்டுமின்றி தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக வடசென்னைப் பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கிடையேயான பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெறும் மையமாகவும் இத்துறை செயல்பட்டு வருகின்றது.

        இத்துறையின் பேராசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் போன்றவற்றின் தமிழ்ப் பாட வல்லுனர்களாகவும், தமிழக அரசால் மாணவர்களுக்காக நடத்தப்பெறும் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நடுவர்களாகவும். கருத்தரங்கங்க விருந்தினர்களாகவும்  செயலாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்றுத் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மாணவர்களும் வழிநடத்தப்பட்டு வருகின்றனர். 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தங்கள் இளநிலைக் கல்வியை நிறைவு செய்த திரளான மாணவர்கள் மேற்படிப்புகளைப் பயின்று வருகின்றனர். தமிழால் தன்னைச் செழுமைப் படுத்திக் கொள்வதோடு தமிழையும் செறிவாக்கும் தமிழ்த்துறையின் நற்பணி மேலும் மேலும் வளரும் என்பது உறுதி. 

VISION AND MISSION OF THE DEPARTMENT OF Tamil

1. Vision of the DEPARTMENT

  • தமிழில் புலமை பெற்ற மாணவர் சமூகத்தை உருவாக்குதல்
  • ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் சிறந்த மனித நேயமிக்க
    குடிமக்களை வளர்த்தெடுத்தல்
  • வேலைவாய்ப்பினை நல்கும் புதிய துறைகளை அறிமுகப் படுத்துதல்
  • எழுத்தாற்றல், பேச்சாற்றலை அளித்து தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ள வைத்தல்

 

2. Mission of the dEPARTMENT:

  • தமிழைக் கற்றலின் இனிமையை உணர்த்தி மாணவர்களை மடைமாற்றம் செய்தல்
  • பாடங்கள் மற்றும் பாடங்களுக்கு அப்பாற்பட்டும் நற்பண்புகளை விதைத்தல்
  • தற்கால வளர்ச்சிக்கேற்ற புதிய துறைகளை இனங்கண்டு அறிமுகப்படுத்துதல்
  • கல்வியின் அங்கமாக தொடர்பயிற்சிகளை அளித்தல்

PROGRAMME SPECIFIC OUTCOMES (PSO)

  • PSO1: செம்மொழித் தமிழ், தமிழரின் தொன்மை, பண்பு, வாழ்வியலை அறிந்து கொள்ளல்
  • PSO2: தமிழ், தமிழர் குறித்த ஆய்வுகளை அறிதல். எழுத்து, சொல், அகம்,பு றம், யாப்பு,அணி குறித்த இலக்கணங்களைக் கற்றல்
  • PSO3: தமிழின் வரலாறு, பண்பாடு, ஆட்சிமுறை மற்றும் கலை,            இலக்கியங்களின் தோற்றங்களை அறிதல்
  • PSO4: இலக்கிய வகைகள், அறம், சமயம், காப்பியம், சங்க இலக்கியங்களை ஊன்றிக் கற்றல். இலக்கிய, இலக்கண முன்னோடிகளை அறிதல்
  • PSO5: ஒப்பிலக்கணம், திறனாய்வு, இதழியல், நாட்டுபுறவியல்,கோயிற்கலை, தொல்லியல் போன்ற வளர்ந்துவரும் புதிய துறைகளை அறிமுகப்படுத்துதல்
  • PSO6: உயர்கல்விக்குத் தகுதிப்படுத்துதல்